தேசிய செய்திகள்

கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

ஆணாக பிறந்து பெண்ணாக மாறியதால் வேலை மறுப்பு: கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள் சென்னையை சேர்ந்தவர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்தவர் ஷானவி பொன்னுசாமி. இவர் ஆணாக பிறந்தவர். சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவில் 13 மாதங்கள் வேலை பார்த்தார். பிறகு, வெளிநாட்டில் ஆபரேஷன் செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.

கடந்த ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்தார். நேர்முக தேர்வில் நன்றாக செயல்பட்டும், அவரது பாலினம் காரணமாக, அவருக்கு வேலை மறுக்கப்பட்டது.

தனக்கு வேலை வழங்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஷானவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஷானவி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

அதில், சுப்ரீம் கோர்ட்டு அனுப்பிய நோட்டீசுக்கு மத்திய அரசும், ஏர் இந்தியாவும் இதுவரை பதில் அளிக்கவில்லை. எனக்கு வேலை இல்லாததால், அன்றாட சாப்பாட்டு செலவுக்கு பணம் இல்லை. வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு நடத்தவும் முடியாது. ஆகவே, என்னை கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை