தேசிய செய்திகள்

சாமானிய மக்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள் - சரத்பவார் கருத்து

சாமானிய மக்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மீண்டும் நான் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஜனநாயகத்தில், நாம் எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது. நீங்கள் வாக்காளர்களைத் துச்சமாக மதித்தால், வாக்காளர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சக்திவாய்ந்த, புகழ்பெற்ற தலைவர்களான இந்திரா, வாஜ்பாய் கூட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அர்த்தம், ஜனநாயக உரிமை அதாவது, அரசியல்வாதிகளை விட சாமானிய மக்கள் புத்திசாலிகள். அரசியல்வாதிகள் தங்களுடைய எல்லையை மீறிச் சென்றால், அவர்களுக்கு வாக்காளர்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு