புதுடெல்லி,
ஒடிசா ஐகோர்ட்டு நீதிபதி சத்ருக்கண பூஜாரி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பாணையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுபோல், டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி அசுதோஷ் குமார், பாட்னா ஐகோர்ட்டுக்கும், ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்த் மாத்தூர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.