புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு மந்திரி ஹர்தீப்சிங் பூரி எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு: பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் (நகர்ப்புறம்) 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் வீடுகள் வாங்குவோருக்கு கடனும், மானியமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 22 வீடுகள் வாங்கியவர்களுக்கு மானியமாக ரூ.8,378.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலம் ரூ.2,683.63 கோடி வழங்கி முதலிடத்தில் உள்ளது.
201516ம் ஆண்டில் ரூ.99.36 கோடியும், 201617ம் ஆண்டில் ரூ.424.33 கோடியும், 201718ம் ஆண்டில் ரூ.2,481.56 கோடியும், நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.5,372.90 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.