தேசிய செய்திகள்

பான் எண் கட்டாயமில்லை: வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ‘ஆதார்’

பான் எண் இல்லாவிட்டாலும், ஆதார் எண்ணைக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு பான் என்னும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் தேவை என்ற நிலை இருந்து வந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாற்றத்தை அறிவித்துள்ளார்.

இனி வருமான வரி கணக்கு தாக்கலுக்கு, பான் எண் இல்லாதவர்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டாலே போதும் என அவர் கூறினார். வரி செலுத்துவோரின் வருமான வரி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துகிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிக அளவிலான பண பரிமாற்றத்தை கண்காணிக்க மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.

குறிப்பிட்ட பண பரிமாற்றங்களின்போது பான் எண் அல்லது ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்புடைய ஆவணங்களை பெறுகிறவர்கள் சரியான பான் எண் அல்லது ஆதார் எண் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பிய உடன் அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்படும். அவர்கள் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்