தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வினியோகம் நாளை தொடக்கம்?

தமிழ்நாட்டில் போட்டியிடும் இடங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் போட்டியிடும் இடங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 3 அல்லது 4 நாட்கள் வினியோகிக்கப்படும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திங்கட்கிழமை முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அதைத்தொடர்ந்து வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்