தேசிய செய்திகள்

ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 31-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளைமறுநாள் அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 31-ந்தேதி (வியாழக்கிழமை) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு, காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில், குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய இணை சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வின் செளபே ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கின்றனர். ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்