தேசிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ

பாஜக வேட்பாளர் திரவுபதி ஒடிசா மாநிலத்தில் பிறந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரபுதி முர்முவுக்கு வாக்களித்ததாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திரபுவதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும், மாநில சட்டப்பேரவைகளில் எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆதரித்துள்ள யஷ்வந்த் சின்காவுக்கு பதிலாக பாஜகவின் திரபுவதி முர்முவுக்கு வாக்களித்துள்ளதாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது மொகிம் கூறியுள்ளார்.

இது குறித்து முகம்மது மொகிம் கூறும் போது, நான் திரபுவதி முர்முவுக்கு வாக்களித்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. எனது மனசாட்சி சொல்வதை கேட்டு நான் வாக்களித்துள்ளேன். எனது வாக்கு முர்முவின் வெற்றியை உறுதி செய்தால் நான் பெருமை அடைவேன்" என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு