உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சாமியர் ஒருவர் மதுரா விருந்தாவன் பகுதியில் பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதாக கூறி, இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் சாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், பாலியல் தொல்லைக்குள்ளான பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை அந்த பகுதி பெண்கள் அடித்து உதைத்து ஆடையை உருவியனர்.