தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வருகிறார் - பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வர உள்ளார். அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

திருவனந்தபுரம்,

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 15-ந்தேதி கேரளா வருகிறார். மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சுவடேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.78 கோடியே 88 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகளை பிரதமர் மோடி அன்றைய தினம் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தகவலை மத்திய சுற்றுலாத்துறை ராஜாங்க மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி இந்த மாதம் 2-வது முறையாக வருகிற 27-ந்தேதி மீண்டும் கேரளா வருகிறார். திருச்சூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை