பரேலி,
உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை பாஜக எம்.பி வருண் காந்தி கடுமையாக கண்டித்தார். இதையடுத்து, பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்து வருண் காந்தி கழற்றிவிடப்பட்டார்.
சமீப காலமாக பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்து கூறுவதை வாடிக்கையாக கொண்ட வருண் காந்தி, விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக வருண் காந்தி மேலும் கூறுகையில், "வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். நான் ஊழல் எதுவும் செய்யவில்லை. நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தையும், அரசு தரும் வீட்டையும் எடுத்துக் கொள்ளவில்லை.
மக்கள் என்னை உயர்த்துவதற்காக எனக்கு அதிகாரத்தைத் வழங்கவில்லை. அவர்களை உயர்த்துவதற்காக அதிகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்றார்.