சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 93 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பல கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு வசதியான வெற்றியைக் கணித்துள்ளன.
பகவந்த் மானை ஆம் ஆத்மி முன்னிறுத்தும்போது, தற்போதைய சரன்ஜித் சன்னியை முதல் மந்திரி வேட்பாளராக கொண்டு காங்கிரஸ் தேர்தலுக்குச் சென்றது.
பாஜக நீண்டகால கூட்டாளியான எஸ்ஏடி(அகாலிதளம்)யுடன் பிரிந்து, பிஎல்சி மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) உடன் கூட்டணியில் போட்டியிட்டது. எஸ்ஏடி(அகாலிதளம்) பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்தது.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 54 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், அகாலிதளம் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாட்டியாலா தொகுதியில் போட்டிடும் காங்கிரசை விட்டு பிரிந்த முன்னாள் முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்(பிஎல்சி கட்சி) பின்னடைவை சந்தித்து வருகிறார்.