தேசிய செய்திகள்

கேரளாவில் சாக்கடைகளை சுத்தம் செய்ய விரைவில் ரோபோக்கள் அறிமுகம்

கேரளாவில் சாக்கடைகளை சுத்தம் செய்ய விரைவில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்

கேரள அரசாங்கம் நகரின் சாக்கடைகளை சுத்தம் செய்ய விரைவில் ரோபோக்களை ஈடுபடுத்த பட உள்ளது.இது குறித்து கேரள நீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஷைனமோல் கூறுகையில்,

நகரின் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ஜென்ரோபோடிக்ஸ் வகையிலான ரோபோக்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.இதையடுத்து அடுத்த வாரம் ரோபோக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தினால் கேரள அரசாங்கம் மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்த ரோபோக்களில் வை-பை,ப்ளூடூத் முதலிய வசதிகள் அடங்கிய கட்டுப்பாட்டு கருவி நான்கு மூட்டுகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.மேலும் கழிவுநீர்களை அகற்ற வாளி போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் அக்கழிவுகளை மனிதர்கள் துப்புரவு செய்வதை மாற்றியமைக்கும் முயற்சியில் கேரள நீர் வாரியத்துடன்,கேரள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான நிதி அளிக்க தயாராகவுள்ளதால் அடுத்த வாரம் ரோபோக்கள் சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்படும்.திருவனந்தபுரத்தில் 5000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் இந்த ரோபோக்களுக்கு பண்டிகூட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் ஜென்ரோபோடிக்ஸ் வடிவமைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் விஷ்ணு கோவிந்த் கூறுகையில்,

இந்த ரோபோ 7-8 மாதங்களில் வடிவமைக்கப்பட்டது.சமீபத்தில் பல்வேறு பொறியியல் துறையைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்களுடன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.அப்பொழுது மருத்துவக்கல்லூரியின் அருகே 30 கிலோ குப்பைகளை அகற்றிய ரோபோ துணிகள், பிளெடுகள் முதலிய பிறப்பொருட்களை பிரித்து எடுத்தது வியப்பாக இருந்தது.இதனால் மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலை மாறும்என கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்