தேசிய செய்திகள்

கோரக்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

கோரக்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோரக்பூர்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான குழந்தைகள் இறந்தன. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று கோரக்பூர் சென்று ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் இறந்த குழைந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் உடன் சென்றார். குழந்தைகள் பலியான சம்பவம் நடைபெற்ற 10 நாட்கள் ஆன நிலையில், ராகுல் காந்தி இன்று கோரக்பூர் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை