தேசிய செய்திகள்

மும்பை மின்சார ரெயில்களில் பயணிக்க பெண்களுக்கு இன்று முதல் அனுமதி

இன்று முதல் மும்பையில் மின்சார ரெயில்களில் பெண்கள் பயணம் செய்ய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அனுமதி வழங்கி உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் ஆஸ்பத்திரி ஊழியர்கள், வங்கி மற்றும் அரசு பணியாளர்கள் பயணம் செய்து வருகின்றனா. மேலும் மாற்றுத்திறனாளிகள், தூதரக அதிகாரிகள், டப்பாவாலாக்கள் போன்ற பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய, மேற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாநில அரசு கடிதம் எழுதி இருந்தது.

அந்த கடிதத்தில் பெண்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி சேவை வரையிலும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அரசின் இந்த கோரிக்கை தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் முடிவு எடுக்காமல் இருந்தது. இந்தநிலையில் மும்பையில் பெண்களை மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அனுமதி வழங்கி உள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்