தேசிய செய்திகள்

மும்பையில் 4-வது நாளாக பலத்த மழை; நாளை ரெட் அலார்ட்

மும்பையில் 4-வது நாளாக பெய்த பலத்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது. இதற்கிடையே நாளை மும்பை மிகவும் பலத்த மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் கடந்த மாதம் பருவ மழை தொடங்கியது. இதில் கடந்த 3 நாட்களாக மும்பையில் மழை கொட்டி தீர்த்தது. இந்தநிலையில் 4-வது நாளாக இன்றும் மும்பையில் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதேபோல மழை காரணமாக மஸ்ஜித் அருகே ரெயில் தண்டவாளத்தையொட்டி இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக துறைமுக வழித்தடத்தில் சுமார் 15 நிமிடங்கள் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மிக,மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல மும்பையில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு