தேசிய செய்திகள்

ஈரானில் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்

ஈரானில் சிக்கி தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் அழைத்து வரப்பட்டனர்.

தினத்தந்தி

ஜோத்பூர்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. ஈரானிலும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவிலான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் காரணமாக, ஈரானில் சுமார் 600 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதையடுத்து, மத்திய அரசின் ஏற்பாட்டின் படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 277 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், 2-வது கட்டமாக மேலும் 275 இந்தியர்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் முதற்கட்ட பரிசோதனைக்கு பிறகு, அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்