தேசிய செய்திகள்

காங்கிரஸ் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என மணிசங்கர் அய்யர் பேச்சு

காங்கிரஸ் கட்சி எந்த தண்டனையை கொடுத்தாலும் ஏற்க தயார் என மணிசங்கர் அய்யர் பேசிஉள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடியை தரம்தாழ்த்தி விமர்சனம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், ராகுல் காந்தி அறிவுறுத்தலுக்கு பிறகு மன்னிப்பு கேட்டார். இருப்பினும், மணிசங்கர் அய்யர் மீது நேற்று இரவு காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சி நடவடிக்கையை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது, பிரதமர் மோடி ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மணிசங்கர் அய்யர் பேச்சு குறித்து பேசிவருகிறார், குஜராத் மக்கள் வாக்குகளால் பதிலடி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எந்த தண்டனையை கொடுத்தாலும் ஏற்க தயார் என மணிசங்கர் அய்யர் பேசிஉள்ளார்.

என்னுடைய கருத்து குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், கட்சி கொடுக்கும் தண்டனை எதுவாகினும் ஏற்க தயார் என மணிசங்கர் அய்யர் கூறி உள்ளார். காங்கிரஸ் எனக்கு அதிகம் கொடுத்து உள்ளது. காங்கிரஸ் இல்லை என்றால் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது எனவும் மணிசங்கர் அய்யர் பேசிஉள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்