தேசிய செய்திகள்

காவல்துறை கைது செய்ய நினைத்தால் சரண்டர் ஆக தயார்: ஹர்திக் படேல் ஆவேசம்

காவல்துறை கைது செய்ய நினைத்தால் சரண்டர் ஆக தயாராக உள்ளதாக படேல் இன தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காந்திநகர்,

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி கடந்த 2015-ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றபோது, விஸ்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ ரிஷிகேஷ் படேலின் அலுவலகம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக ஹார்திக் படேல் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

விஸ்நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹார்திக் படேல் நேரில் ஆஜராகவில்லை. இதுபோல், அவர் நேரில் ஆஜராகாமல் இருப்பது தொடர்ச்சியாக 2-ஆவது முறையாகும். இதுபோல், போராட்டக் குழுவைச் சேர்ந்த மேலும் சிலரும் ஆஜராகவில்லை.இதையடுத்து, ஹார்திக் படேல், சர்தார் பரேல் குழு ஒருங்கிணைப்பாளர் லால்ஜி படேல் உள்ளிட்ட மேலும் 6 பேருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

தனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் படேல், போலீஸ் என்னை கைது செய்ய நினைத்தால் நான் சரண்டர் ஆக தயாராக இருக்கிறேன். என்னை சிறையில் தள்ளினாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்