தேசிய செய்திகள்

சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது: காங்கிரஸ்

சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தையடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூட உள்ள நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை முற்றிலும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்