தேசிய செய்திகள்

குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட 16 வயது சிறுமி கிரிக்கெட்டில் சாதனை

குழந்தை திருமணத்தில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட 16 வயது சிறுமி கிரிக்கெட் துறையில் சாதனை படைத்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் சரூர்நகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமி பி. அனுஷா. கடந்த வருடம் ஏப்ரலில் சிறுமிக்கும், அவரது 26 வயது நிறைந்த உறவினருக்கும் திருமணம் செய்து வைக்க அனுஷாவின் பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனை அறிந்த போலீசார் மற்றும் நகர குழந்தை உரிமைகள் அமைப்பினர் திருமணம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர்.

இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவியான அனுஷா பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் திறம்பட விளையாடியுள்ளார். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

அடுத்து நடைபெற உள்ள ஜூனியர் ரக்பி போட்டியிலும் அனுஷா பங்கேற்க உள்ளார். சிறுமி அனுஷா நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவுரவிக்கப்பட்டார். அதில் கலந்து கொண்டு வாழ்த்திய நகர காவல் ஆணையாளர் பகவத், காவல் துறை சிறுமி கல்வி பயின்று முடிக்கும் வரை அவருக்கு தேவையான நிதியுதவியை வழங்கும் என கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை