தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை - மத்திய அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வந்தே பாரத் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் கீழ் குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த ஜூலை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதால் சர்வதேச விமானப்போக்குவரத்து தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. அதன்படி சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 31ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், சர்வதேச பயணிகளின் விமானங்கள் ஜூலை 31 வரை நிறுத்தி வைக்கப்படும், ஆனால் சர்வதேச கட்டுப்பாடு கொண்ட அனைத்து சரக்கு விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறையால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என கூறி உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்