தேசிய செய்திகள்

ரூ.1 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் பஸ் பயணியிடம் சிக்கியது

ரூ.1 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் பஸ் பயணி ஒருவரிடம் சிக்கியது.

தினத்தந்தி

சூரத்,

குஜராத் மாநிலத்தில், சூரத் அருகே நியோல் சோதனை சாவடியில், போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மும்பையில் இருந்து வந்த ஒரு பஸ்சை சோதனையிட்டபோது, அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணியிடம் இருந்து ஏறத்தாழ ரூ.1 கோடி (ரூ.99 லட்சத்து 95 ஆயிரம்) பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பயணியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் வினோத் ஷா என்பது தெரியவந்தது. மும்பையை சேர்ந்த ஒருவர், குஜராத்தில் உள்ள வியாபாரியிடம் இந்த பணத்தை கொடுக்க சொன்னதாக அவர் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு