தேசிய செய்திகள்

காஷ்மீரில் ரூ.25 ஆயிரம் கோடி நில மோசடி; தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்தது சி.பி.ஐ.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரூ.25 ஆயிரம் கோடி நில மோசடி தொடர்புடைய குற்றச்சாட்டில் சி.பி.ஐ. 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், சட்டவிரோத வகையில் தேர்வு செய்யப்பட்ட, தகுதியற்ற நபர்களுக்கு அரசு நிலம் மீது உரிமையாளர்களுக்கான அனுமதியை வழங்கி மாநில கஜானாவுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் ரூ.25 ஆயிரம் கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இதன் மீது நடந்த விசாரணையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை ஒரு மாதத்திற்கு முன் சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.

இதன் மீது தனித்தனியாக 3 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இந்த நிலத்தில் வர்த்தக கட்டிடம் கட்டுவதற்கு தனிநபருக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற அடையாளம் வெளியிடப்படாத அதிகாரிகள் உதவி புரிந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. காஷ்மீர் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே சி.பி.ஐ. அமைப்பு இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருகீறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை