தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்தால் ரூ.5 லட்சம் - பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்தால் ரூ.5 லட்சம் தருவதாக கூறிய பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் சாங்கிலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக சஞ்சய்காகா பாட்டீல் எம்.பி. போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மாவட்ட பா.ஜனதா தலைவர் பிரிதிவிராஜ் தேஷ்முக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாரத்தின் போது, பிரிதிவிராஜ் தேஷ்முக்கிடம், கூட்டத்தில் இருந்தவர், சஞ்ஜய்காகா பாட்டீல் மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன தருவீர்கள்? என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் உங்களுக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும் என கூறினார்.

பின்னர் இதனை சுதாரித்துக்கொண்ட அவர், தான் நகைச்சுவையாக தான் அப்படி குறிப்பிட்டதாக தெரிவித்து தனது பேச்சை தொடர்ந்தார். ஆனால் அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தேர்தல் கமிஷனில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது. புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு