தேசிய செய்திகள்

விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.6 கோடி “மெமரி கார்டு”

விமானத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான மெமரி கார்டுகள் கடத்திவரப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். .

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருள் கொண்டுவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஹாங்காங்கில் இருந்து வந்த பயணிகளை சோதனையிட்ட சுங்க இலாகா அதிகாரிகள் அபிஷேக் பவான் பாய் ரான்பரியா என்பவர் மீது சந்தேகப்பட்டு அவரை தனியாக அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர் உரிய ஆவணமின்றி 1 லட்சம் மைக்ரோ எஸ்.டி. கார்டுகள் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனால் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மும்பையை சேர்ந்தவர் என்றும், அவர் கொண்டு வந்த மெமரி கார்டுகள் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புடையவை என்றும் சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்