தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.10 ஆக சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

புதுடெல்லி

இந்தியா ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. பலவிதமான நடவடிக்கை எடுத்தும் கூட இந்தியா ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இன்று ரூபாய் மதிப்பில் பெரிய சரிவு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இந்த சரிவு நீடிக்கும் என்று தகவல்கள் வருகிறது.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி 72 ரூபாய் ஆனது. அதற்கு மறுநாள் செப்டம்பர் 6ம் தேதி 72.10 ரூபாயை தாண்டியது. அன்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு. செப்டம்பர் 9ம் தேதி 33 பைசா வீழ்ச்சி அடைந்து, இந்திய ரூபாய் மதிப்பு 72.33 ரூபாய் ஆகியது. கடந்த 3ம் தேதி இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது.

இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.10ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து சரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்