மும்பை
சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.53 ஆக சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இந்தியாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 70.10 ஆக இருந்த நிலையில் இன்று காலை வணிகத்தின் போது 70.20 ஆக சரிந்து, முற்பகலில் 70.53 ஆக மேலும் குறைந்தது.