தேசிய செய்திகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!

ஜனவரி 23ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதுபோன்ற முடிவுகள் அரசின் கொள்கையின் ஒரு பகுதி என்று கோர்ட்டு கூறியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய விடுமுறை அறிவிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது அரசின் கொள்கையின் விஷயம் என்று கூறிய நீதிபதிகள் மனுவை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த விவகாரம் நிர்வாகத்தின் கொள்கை வகுப்பின் வரம்பிற்குள் வருவதால், எந்தவொரு குறிப்பிட்ட முடிவையும் எடுக்குமாறு அரசாங்கத்தை நீதிமன்றம் கோர முடியாது என்று கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

நேதாஜியின் சேவைகளை அங்கீகரிப்பதற்கான சிறந்த வழி, இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்ததைப் போல, நாமும் கடுமையாக உழைப்பதே சிறந்த வழி என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை