தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை விவகாரம்: ‘குற்றம் நிரூபிக்கப்பட்டால் அக்பர் ராஜினாமா செய்ய வேண்டும்’ - மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலே

பாலியல் தொல்லை விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அக்பர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலே கூறினார்.

தினத்தந்தி

புனே,

மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண்கள் புகார் செய்தனர். இது பொய்யானது, கற்பனையானது என அவர் மறுத்துள்ளார். புகார் பற்றி மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலேவிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

பெண்களை துன்புறுத்தும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நானா படேகர், எம்.ஜே.அக்பர் போன்று பிரபலமானவர்களாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்பர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், மீ டூ சிலரை பொய் புகாரில் சிக்கவைக்கும் தலமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது என்பது எனது கருத்து. அதுபோன்ற புகார்கள் குறித்து போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் அதவாலே கூறினார்.


கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்