கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

குடியரசு தின வன்முறை: வழக்குகளை தள்ளுபடி செய்ய சசி தரூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு

குடியரசு தின வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் தன் மீது பதிவு செய்த வழக்குகளை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சசி தரூர் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் சார்பில் குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசாரும், விவசாயிகளும் காயமடைந்தனர்.

இதனிடையே விவசாயி ஒருவர் வேகமாக ஓட்டிவந்த டிராக்டர் கவிழ்ந்ததில் அவர் பலியானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையே இதுகுறித்து டுவிட்டரில் உண்மைக்கு மாறான கருத்தை வெளியிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மூத்த பத்திரிகையாளர்கள் 6 பேருக்கு எதிராக நொய்டா, டெல்லி, மத்தியபிரதேச போலீசில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சசி தரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் செய்துள்ளனர். அந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை