தேசிய செய்திகள்

சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை

கொரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகள் விதிக்க முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சிக்கிம் மாநில தலைமை செயலாளர் எஸ்.சி குப்தா, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு காற்று மாசு அதிகரிக்கும் பட்சத்தில் கடும் சிரமம் ஏற்படும் என்பதால், பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாக தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு