புதுடெல்லி,
தடுப்பூசி டோஸ்கள் பற்றிய விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 17 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 810 டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 16 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரத்து 76 டோஸ்கள் நேற்று காலை 8 மணி வரை போடப்பட்டு இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 72 லட்சத்து 42 ஆயிரத்து 14 டோஸ்கள் இன்னும் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், அடுத்த 3 நாட்களில் இன்னும் 46 லட்சத்து 61 ஆயிரத்து 960 டோஸ்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.