தேசிய செய்திகள்

மராட்டியத்தில் பன்றி காய்ச்சலுக்கு நடப்பு ஆண்டில் 7 பேர் பலி; 142 பேருக்கு பாதிப்பு

மராட்டியத்தில் பன்றி காய்ச்சலுக்கு நடப்பு ஆண்டு ஜூலை வரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

புனே,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்தபோது, மராட்டியத்தில் முதல் மற்றும் 2வது அலை கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகளாலும் மக்கள் அவதிப்பட்டனர். இதுவரை மொத்த கொரோனா பாதிப்புகள் 80,29,910 ஆகவும், உயிரிழப்புகள் 1,48,051 ஆகவும் உள்ளன.

இந்நிலையில், மராட்டியத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி மராட்டிய பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 142 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

மும்பையில் எச்.1.என்.1. பாதிப்புகள் 43 பேருக்கும், புனே, பால்கர் மற்றும் நாசிக்கில் முறையே 23, 22 மற்றும் 17 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  நாக்பூர் மற்றும் கோலாப்பூரில் தலா 14 பேருக்கும், தானேவின் 7 பேர், கல்யாண்-தோம்பிவிலியில் 2 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதனால், புனேவில் 2 பேர், கோலாப்பூரில் 3 பேர் மற்றும் தானே மாநகராட்சியில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்