தேசிய செய்திகள்

தெலுங்கானா: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்

விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. அதேபோல், குவைத்தில் இருந்து ஐதராபாத்திற்கு குவைத் ஏர்வேஸ் விமானம் இன்று காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. இந்த 2 விமானங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத் விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசர அவரசமாக ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதேவேளை, ஐதராபாத் வந்து கொண்டிருந்த குவைத் ஏர்வேஸ் விமானம் நடு வானில் திரும்பி மீண்டும் குவைத்திற்கு திரும்பி சென்றவிட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 விமானங்களுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்