தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு விசாரணை: வக்கீல்களுக்கு நீதிபதி வேண்டுகோள்

அயோத்தி வழக்கு விசாரணையில், வாதங்களை முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என தெரிவியுங்கள் என வக்கீல்களுக்கு நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 25-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் நடைபெற்றது. மதியம் விசாரணை மீண்டும் தொடங்கியதும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முஸ்லிம் அமைப்புகள் தரப்பு மூத்த வக்கீல் ராஜீவ்தவனிடம், உங்கள் உதவியாளர்கள், இதர தரப்பு வக்கீல்கள் ஆகியோருடன் ஆலோசித்து வாதங்கள் முடிவடைய இன்னும் எத்தனை நாட்கள் தேவை என்பதை கோர்ட்டுக்கு தெரிவியுங்கள் என்றார்.

வாதங்கள் எப்போது முடியும் என்று தெரிந்தால்தான் எங்களுக்கு தீர்ப்பு எழுதுவதற்கு எத்தனை நாட்கள் கிடைக்கும் என்பது தெரியவரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு ராஜீவ்தவன், தனது தரப்பு வாதத்தை விரைவாக முடிப்பதாகவும், தனக்கு வருகிற வெள்ளிக்கிழமை ஒரு நாள் விசாரணையில் இருந்து விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்