தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின்

டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில மாதங்களாக கெரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து வருகிறது. இதையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறுகையில்,

டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.4 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், அடுத்த 6 மாதங்களில் 2,800 தீவிர சிகிச்சை படுக்கைகளை கொண்ட 7 மருத்துவமனைகளில் உருவாக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை