புதுடெல்லி,
கர்நாடகாவில் குமாரசாமி அரசு வீழ்ந்தது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கர்நாடக கூட்டணி அரசில் என்ன கறை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பா.ஜனதாவின் அப்பட்டமான குதிரை பேரமும், அதிகார துஷ்பிரயோகமுமே அரசின் வீழ்ச்சிக்கு காரணம் அந்த அரசு அமைக்கப்படுவதை ஆரம்பத்திலேயே பா.ஜனதா தடுக்க முயன்றது. அப்போது இருந்து இப் போதுவரை, அரசியல் ஒழுக்கக்கேடும், பண நாயகமும் தெளிவாக தெரிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.