தேசிய செய்திகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந்தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந்தேதி தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி)13ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31ந்தேதி காலை 11 மணி அளவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரையாற்றுகிறார்.

பிப்ரவரி 1ந்தேதி இந்த ஆண்டுக்கான (20192020) இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் பிரதமர் நரேந்திரமோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் ஆகும். மேலும் இந்த நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரும் இதுவாகும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு