தேசிய செய்திகள்

காதல் தொல்லை கொடுத்த வாலிபர்... பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

மாணவியை பின்தொடர்ந்து சென்று வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கொப்பல் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தம் என்பவர்,சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். புருஷோத்தம், தனது காதலை பலமுறை கூறியும் சிறுமி ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் அவர் தொடர்ந்து சிறுமியை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் வெவ்வேறு செல்போன்களில் இருந்து சிறுமியை தொடர்புகொண்டு புருஷோத்தம் தொந்தரவு செய்து வந்துள்ளார். புருஷோத்தமை கண்டித்தும் அவர் தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி மனமுடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில், வீட்டில் இருந்த விஷத்தை சிறுமி குடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த அவரது பெற்றோ வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டுக்குள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மகள் பிணமாக கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேவூரு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் பேவூரு போலீஸ் நிலையம் முன்பு திடீரென்று போராட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து பேவூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்