கோப்பு படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்களில் 94 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது - மத்திய அரசு தகவல்

மாநிலங்களில் இன்னும் 94 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்படும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதிலும் மாநிலங்களிடம் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மாநிலங்களில் இன்னும் 94 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. குறிப்பாக மாநிலங்களுக்கு இதுவரை 17 கோடியே 2 லட்சத்து 42 ஆயிரத்து 410 டோஸ்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 16 கோடியே 7 லட்சத்து 94 ஆயிரத்து 795 டோஸ்கள் போடப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலையில் வௌயிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அந்தவகையில் 94 லட்சத்து 47 ஆயிரத்து 614 டோஸ்கள் மாநிலங்களிடம் இருப்பதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம் இன்னும் 36 லட்சத்து 37 ஆயிரத்து 30 டோஸ்கள் அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை