எதிர்க்கட்சிகள் ஆலோசனை
சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மும்பையில் இருந்தபடி மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து சரத்பவார் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:-
வேதனையான பாடம்
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சியை பாராட்டுகிறேன். இந்தியாவில் தற்போதைய சூழ்நிலை மிகவும் இருண்டதாக தோன்றுகிறது. விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு வேதனையான படம். பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, கொரோனா பிரச்சினை, வேலையின்மை, எல்லை தகராறு, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளை நாடு எதிர்கொள்கிறது. அரசாங்கம் இந்த பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டது.
ஒன்று சேர வேண்டும்
ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர்கள், நம் நாட்டின் ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை காப்பாற்ற ஒன்று சேர வேண்டும். நம் நாட்டிற்கு ஒரு நல்ல நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கொடுக்க, அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக கையில் எடுப்பதை விட முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சினையாக தீர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.