தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் : ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீநகர் - பரமுல்லா சாலையில், காரில் சென்று கொண்டிருந்த பயங்கரவாதிகளை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT