தேசிய செய்திகள்

தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக கருதி தமிழ்நாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக கருதி, தமிழ்நாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குடிநீர் பஞ்சமும், பற்றாக்குறையும் நிலவுகிறது. கடந்த 6 மாதமாக போதுமான மழை இல்லை. காவிரி நதி நீரும் கிடைக்கவில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத அவல நிலை நிலவுகிறது. இந்த பிரச்சினையை தேசிய பேரிடராக கருதி, தேசிய பேரழிவு நிர்வாக நிதியில் இருந்தும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்தும், தமிழ்நாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்