புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத்தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு பல்வேறு மாநிலங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு வரும் 5-ந் தேதி ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாக தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், மாநில கல்வித்துறை செயலாளர்களின் கூட்டத்தை மத்திய அரசு நேற்று கூட்டி, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி விவாதித்தது. இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றிய தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ள கூகுள் டிராக்கர் மூலமாக வாரம் இரு முறை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.