ஐதராபாத்,
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் தவறானது என தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ரேவந்த் ரெட்டி, சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து மிகவும் தவறானது என்றார். அத்துடன், சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலங்கானா மாநில முதல் மந்திரி கூறிய கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.