உன்னோவ்
உத்தரபிரதேசத்தில் உன்னோவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பெண் ஒருவர் குற்றஞ்சாட்டினார். இது குறித்து பலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் அந்த பெண் நேற்று குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார். இதையடுத்து போலீஸ் அவர்களை கைது செய்தனர்.
ஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை பப்பு சிங்கை ( 50) கடுமையாக தாக்கியதால் அவருக்கு உடல் முழுக்க காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிங்கை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவுசெய்துள்ளனர். இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி இருந்தது. இதையடுத்து இரவோடு இரவாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பெண்ணின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பப்பு சிங்கை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என உன்னோவ் மாவட்ட கண்காணிப்பாளர் புஷ்பாஞ்சலி தேவி கூறினார்.