தேசிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்பை வரவேற்றனர்.

இதையடுத்து, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையையும் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்களை டிரம்பிற்கு ஜனாதிபதி அறிமுகம் செய்து வைத்தார். அதேபோல், அமெரிக்க பிரமுகர்களை டிரம்ப், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்