தேசிய செய்திகள்

உன்னாவ் பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை: உத்தரபிரதேச அரசு

உன்னாவ் பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம் பெண், கோர்ட்டு விசாரணைக்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டார்.

இதில் 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் முழுவதும் கடும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிதி உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும், விரைவு நீதிமன்றம் மூலம் வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை