தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 813 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை

நாட்டிலேயே முன்மாதிரியாக 813 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படுவதாக உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

சுற்றுச்சூழலுக்கு தீங்காக அமையும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாடாக சாலை அமைக்க உபயோகிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இதுபற்றி நேற்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடும்போது, "நாட்டிலேயே முன்மாதிரியாக 813 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படுகிறது. 466 சாலைகள் இதில் அடங்கும். இந்த திட்டத்தில் தினசரி 9 கி.மீ. தூரம் சாலை அமைக்கப்பட்டு வருகிறது" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நாட்டிலேயே அதிக தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் பிளாஸ்டிக் சாலை எனும் புரட்சிக்கு வழிகாட்டிய பெருமை தமிழகத்தையே சாரும். மதுரை தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியர் வாசுதேவன் இந்தத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததற்காக 'இந்தியாவின் பிளாஸ்டிக் மனிதர்' எனப் புகழப்படுகிறார். இவருக்கு மத்திய அரசு 2018-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தது. 2002-ம் ஆண்டிலேயே தமிழகத்தின் கோவில்பட்டியில் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே முன்மாதிரியாக 813 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படுவதாக உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்